போட்டியைவிட்டு விலக உண்மையாக காரணம் இது தான் – அமெரிக்க ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நவம்பர் ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சியின் டொனல்ட் டிரம்ப் ஜனாதிபதி வீழ்த்தப்பட வேண்டும் என்பதற்காகவே போட்டியிலிருந்து விலகியதாகக் கூறியிருக்கிறார்.
தாம் மீண்டும் போட்டியிட முயன்றது ஜனநாயகக் கட்சியினரிடையே நீடித்த கருத்துவேறுபாட்டை ஏற்படுத்தி கவனத்தைச் சிதறச் செய்துவிடுமோ என்று அஞ்சியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமக்குப் பெரிதாக உடல்நலக் கோளாறு ஏதுமில்லை என்று 81 வயதான பைடன் கூறினார்.
டிரம்ப்புடன் முதல் நேரடி விவாதத்தில் சிறப்பாகச் செய்யமுடியாமல் போனதற்கு அப்போது உடல்நலம் குன்றியிருந்ததே காரணமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
டிரம்ப்பை வீழ்த்தியே ஆக வேண்டும் என்று கூறிய பைடன், ஹாரிஸின் வெற்றிக்குத் தம்மால் இயன்ற அனைத்தையும் செய்யவிருப்பதாகக் கூறினார்.
(Visited 18 times, 1 visits today)