அவுஸ்திரேலிய மூதாட்டி சடலமாக மீட்பு – சொகுசு கப்பல் பயணத்தில் பரபரப்பு!
சுற்றுலா சென்ற அவுஸ்திரேலியப் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாம் பயணம் செய்த சொகுசு கப்பலில் பயணித்தவர்கள் தம்மைத் தனித் தீவு ஒன்றில் விட்டுச் சென்றதை அடுத்து, 80 வயதுடைய பெண் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
Ocean Adventurer என்ற சொகுசு கப்பலில் பயணித்தவர்கள் கடந்த சனிக்கிழமை லிசட் தீவில் (Lisedt Island) மலையேறும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்கள்.
அப்போது, இந்தப் பெண் சக பயணிகளிடமிருந்து விலகிச் சென்றுள்ளார்.
இந்தப் பயணிகள் கப்பலில் ஏறிப் பல மணித்தியாலங்கள் சென்ற பின்னர் தான் மூதாட்டியைத் தவறவிட்டதை உணர்ந்திருக்கிறார்கள்.
கப்பல் லிசட் தீவுக்குத் திரும்பியபோது மூதாட்டி இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
(Visited 2 times, 2 visits today)





