வேற்றுகிரகவாசிகள் இருக்கலாம், கடவுளின் படைப்புக்கு வரம்புகள் இல்லை – பாதிரியார் ஜோஸ் ஃபியூன்ஸ்!

வேற்றுகிரகவாசிகள் “கடவுளிடமிருந்து மீட்பு” கோரக்கூடாது என்று வத்திக்கான் மூத்த அதிகாரி ஒருவர் பரிந்துரைத்துள்ளார்.
2008 ஆம் ஆண்டில் ஜேசுட் பாதிரியார் ஜோஸ் ஃபியூன்ஸ் தெரிவித்த கருத்துக்கள், வேற்று கிரக வாழ்க்கையில் அதிகரித்து வரும் ஆர்வத்தின் மத்தியில் மீண்டும் வெளிப்பட்டுள்ளன.
அப்போதைய வத்திக்கான் ஆய்வகத்தின் இயக்குநராக இருந்த பாதிரியார் ஃபியூன்ஸ், பிரபஞ்சத்தில் பிற உயிரினங்களின் சாத்தியக்கூறு கத்தோலிக்க நம்பிக்கைக்கு முரணானது அல்ல என்று கூறினார்.
“இது விசுவாசத்திற்கு முரணானது அல்ல, ஏனென்றால் கடவுளின் படைப்பு சுதந்திரத்திற்கு நாம் வரம்புகளை வைக்க முடியாது” என அவர் தெரிவித்துள்ளார்.
மனித இனத்தைச் சேர்ந்த நாம் உண்மையில் அந்த வழிதவறிப்போன ஆடுகளாக இருக்கலாம், ஒரு போதகர் தேவைப்படும் பாவிகளாக இருக்கலாம் – நம்மைக் காப்பாற்றுவதற்காக கடவுள் இயேசு மனிதராக உருவெடுத்து வந்தார்.
அதேபோல் மற்ற அறிவுள்ள உயிரினங்களும் இருந்தால், அவர்களுக்கு மீட்பு தேவை என்பது நிச்சயமாக இல்லை. அவர்கள் தங்கள் படைப்பாளருடன் முழு நட்பில் இருந்திருக்கலாம்.” எனவும் அவர் கூறியுள்ளார்.