பதவிகளை பரிமாறிக்கொள்வதால் பயனில்லை : நாமல் கருத்து!

அண்மையில் இடம்பெற்றது அமைச்சரவை மாற்றம் இல்லை எனவும், பதவிகள் மட்டுமே பரிமாறிக்கொள்ளப்பட்டதாகவும், இதனால் நாட்டு மக்களுக்கு எந்த பயனும் ஏற்படாது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று (25.10) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், மக்களுக்கு நன்மை செய்ய 2030 வரை காத்திருக்க முடியாது எனவும் கூறினார்.
அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுதிட்டம் சமர்பிக்கப்படவுள்ளது. வரவு செலவுத் திட்டத்தில் கூட ஜனாதிபதி இந்நாட்டு மக்களுக்கான நிவாரணத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவார் என நம்புகின்றோம்.
முதிர்ந்த அரசியல்வாதிகள் கூட்டணி அரசியல் பற்றி ஓரளவு புரிந்து கொண்டு கட்சிகளுடன் கலந்துரையாடினால் நல்லது” எனத் தெரிவித்துள்ளார்.
(Visited 11 times, 1 visits today)