டுபாயில் விற்பனையாகும் உலகின் மிக விலையுயர்ந்த கோப்பி – அதிர்ச்சியை ஏற்படுத்திய விலை
உலகிலேயே மிக விலையுயர்ந்த கோப்பி, தற்போது டுபாயில் கபேகளில் விற்பனை செய்யப்படுகிறன.
பனாமாவிலுள்ள உயர் ரகத்திலான கோப்பி கொட்டைகளிலிருந்து இவை பிரத்தியேகமாக தயாரிக்கப்படுகிறது.
டுபாயில் ஒரு கோப்பை கோப்பி 3,600 திர்ஹாமிற்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதிகளவான கொள்வனவாளர்கள் முன்னிலையில் உயர்தரத்திலான கோப்பிக் கொட்டைகள் ஏலம் விடப்படும். பல மணிநேரம் காத்திருந்து அதனை பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை உள்ளது.
அதற்கமைய ஏலத்தில் 2 கிலோ கோப்பி கொட்டைகள், சுமார் 2.2 மில்லியன் திராமிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய ஒரு கிலோ கோப்பிக் கொட்டை சுமார் 110,000 திர்ஹாம் ஆகும்.
தனித்துவமான கோப்பியுடன், மல்லிகைப் பூ, ஒரஞ்சு உள்ளிட்ட பல சுவைகள் கலக்கப்படுகிறது. கோப்பியின் சுவை மிகவும் இனிப்பாக இருக்கும் என குறிப்பிடப்படுகிறது.
டுபாயில் கோப்பியின் விலை மிக அதிகமாக இருந்தாலும், இது போன்ற ஆடம்பரப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது வழமை என சிலர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான உயர்தர கோப்பிகள் செல்வந்தவர்களை இலக்கு வைத்து விற்பனை செய்யப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.





