வரலாற்றில் பதிவான உலகின் மிக வெப்பமான நாள்

வரலாற்றில் பதிவான உலகின் மிக வெப்பமான நாளாக ஜூலை 3ஆம் திகதி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவின் தேசியச் சுற்றுச்சூழல் முன்னுரைப்பு நிலையம் அந்தத் தகவலை வெளியிட்டது.
ஜூலை 3ஆம் திகதியன்று உலகின் சராசரி வெப்பநிலை 17.01 பாகை செல்சியஸாகப் பதிவானது.
இதற்கு முன்னர் 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் வெப்பநிலை ஆக அதிகமாக 16.92 பாகை செல்சியஸாக இருந்தது.
உலக அளவில் பல பகுதிகளில் கடும் வெப்பம் நிலவுகிறது.
பருவநிலை மாற்றத்தோடு, El Nino எனும் வானிலை நிகழ்வால் வெப்பநிலை அதிகரித்திருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
(Visited 34 times, 1 visits today)