அமெரிக்கா இல்லாமல் உலகம் அழிந்துவிடும் – டிரம்ப் விடுத்த எச்சரிக்கை

அமெரிக்கா இல்லையென்றால் உலகில் உள்ள அனைத்தும் அழிந்துவிடும் எனஅமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஓவல் அலுவலகத்தில் அவர் நிருபர்களிடம் உரையாற்றும் போது இதனை குறிப்பிட்டுள்ளார்.
“எனது முதல் ஆட்சி காலத்தில் அமெரிக்காவின் பொருளாதாரத்தை மிகப்பெரியதாக மாற்றினேன். ஆனால், ஜோ பைடன் நிர்வாகம் செய்த செயல்களால் சீரழியத்துவங்கியது.
வரிகள் மூலம் அமெரிக்காவின் நிதி பலம் பெற்று வருகிறது. வரி காரணமாக அதிகளவு பணம் வருகிறது. நமக்கு அனைத்தையும் வரி பெற்று தருகிறது. அமெரிக்கா இல்லை என்றால் உலகில் உள்ள அனைத்தும் அழிந்துவிடும்.
முன்னதாக அவர் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், வரி மூலம் சீனா, இந்தியா, பிரேசில் நம்மை அழிக்கிறது. அவர்கள் செய்வதை விட வரி சிறந்தது. உலகில் உள்ள எந்த மனிதர்களையும் விட வரியை நான் புரிந்து கொண்டேன்.
உலகில் அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் நாடாக இந்தியா திகழ்கிறது. இனிமேல் வரி இருக்காது என என்னிடம் தெரிவித்துள்ளனர். அவர்கள் மீது வரி விதிக்கவில்லை என்றால், இந்த சலுகை கிடைத்து இருக்காது” என டிரம்ப் தெரிவித்துள்ளார்.