உலகமே எதிர்பார்க்கும் ஒலிம்பிக் போட்டிகள்!! பாதுகாப்பு பணிகள் தீவிரம்

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 வரை ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 8 வரை பிரமாண்டமாக நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
இங்கு, பாராலிம்பிக் போட்டியில் 549 போட்டிகளில் 4,400 வீரர்களும், ஒலிம்பிக்கில் 329 போட்டிகளில் 10,500 வீரர்களும் பங்கேற்க உள்ளனர்.
இந்த முழு நிகழ்விற்கும் பிரான்ஸ் அரசாங்கம் 20,000 படையினர் மற்றும் 40,000 க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகளின் விரிவான பாதுகாப்பை வழங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளின் போது 15 மில்லியன் சுற்றுலா பயணிகள் பிரான்ஸிற்காக காத்திருப்பதாக கூறப்படுகிறது.
(Visited 10 times, 1 visits today)