இலங்கை வரும் போது விபத்துக்குள்ளான கப்பல் – பாலத்தின் இடிபாடுகளை அகற்றும் பணிகள் தீவிரம்
இலங்கை வந்த கப்பல் அமெரிக்காவில் பால்ட்டிமோர் பாலத்தின் மோதி விபத்துக்குள்ளான நிலையில் இடிபாடுகளை அகற்றும் பணி தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சரக்குக் கப்பல்கள் கடந்துசெல்லப் பாதையை மீண்டும் திறந்துவிடுவதற்கான முயற்சியாக அது அமைந்துள்ளது.
பாரந்தூக்கிகள் இடிபாடுகளை அகற்றும் புதிய படங்களை அமெரிக்கக் கடலோரக் காவற்படை வெளியிட்டுள்ளது.
மார்ச் 26ஆம் திகதி டாலி சரக்குக் கப்பல் மோதிப் பாலம் இடிந்தது. இதுவரை கப்பலின் 36 கொள்கலன்கள் அகற்றப்பட்டுவிட்டன.
நீரில் மூழ்கிய சாலை இடிபாடுகளைப் பகுதி பகுதியாக உடைக்கும் பணி தற்போது நடைபெறுகிறது.
(Visited 19 times, 1 visits today)





