ரஷ்ய அதிபரின் பெற்றோருடைய புதைக்குழியை இழிவுப்படுத்திய பெண் கைது!
ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் பெற்றோரின் புதைகுழிவுகளை இழிவுபடுத்திய குற்றச்சாட்டில் 60 வயது பெண்ணிற்கு ரஸ்ய நீதிமன்றம் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.
ரஸ்ய ஜனாதிபதியின் பெற்றோரின் புதைகுழிக்கு அருகில் ஒரு அசுரனையும் ஒரு கொலைகாரனையும் வளர்த்தவர்கள் என குறிப்பொன்றை வைத்துவிட்டு சென்ற 60 வயது பெண்ணிற்கு ரஸ்ய நீதிமன்றம் ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட சிறைத்தண்டனையை வழங்கியுள்ளது.
செயின்பீட்டர்ஸ்பேர்க்கை சேர்ந்த இரினா சைபனேவா என்ற 60 வயது பெண்ணிற்கே நீதிமன்றம் இந்த தண்டனையை வழங்கியுள்ளது.
அரசியல் குரோததன்மையால் அவர் இதனை செய்துள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீதான ரஸ்யாவின் போர் குறித்த வெறுப்பே அந்த பெண்ணிண் இந்த நடவடிக்கைக்கு காரணம் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
புட்டினின் பெற்றோரின் புதைகுழிக்கு அருகில் குறிப்பிட்ட வெறிபிடித்தவரின் பெற்றோர் என குறிப்பொன்றை விட்டுச்சென்றார் என சுயாதீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
புட்டினிற்கு மரணம்இநீங்கள் அசுரனை கொலைகாரனை வளர்த்தீர்கள் துண்டுக்குறிப்பில் தெரிவித்திருந்த அவர் புட்டின் மிகப்பெரும் துயரத்தையும் வேதனையையும் ஏற்படுத்துவதால் அவரை உங்களுடன் எடுத்துச்செல்லுங்கள் எனவும் அதில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அவர் உயிரிழப்பார் என முழு உலகமும் பிரார்த்தனை செய்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.