சுவிஸில் அவசர உதவியை அழைத்த பெண்ணுக்கு கிடைத்த பதிலால் அதிர்ச்சி ..!
சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில், தன் தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் பதற்றமடைந்து அவசர உதவி எண்ணை அழைத்தார் ஒரு பெண். ஆனால், அவருக்கு கிடைத்த பதில் அவரை மேலும் அதிர்ச்சியடைய வைத்தது.
அந்த பெண், தன் தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் பதற்றமடைந்து அவசர உதவியை அழைக்க, மறுமுனையில் பேசியவரோ, ’அமைதியாக இருங்கள், இல்லையென்றால் தொலைபேசி இணைப்பைத் துண்டித்துவிடுவேன்’ என்று கூறிவிட்டு, இணைப்பைத் துண்டிக்க, அந்த பெண் அதிர்ச்சியடைந்துள்ளார்.பின்னர் மீண்டும் அவர் அவசர உதவி எண்ணை அழைத்த பிறகுதான் அவரது தந்தைக்கு உதவி கிடைத்துள்ளது.
தற்போது இந்த சம்பவம் தொடர்பாக ஜெனீவா அவசர உதவிப் பிரிவின் மேலாளராகிய Robert Larribau என்பவர், சம்பந்தப்பட்ட பெண்ணிடம் மன்னிப்புக் கோரியுள்ளார்.
இனிமேல் இதுபோன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் நடக்காதவகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் அந்தப் பெண்ணிடம் தெரிவித்துள்ளார்.