உலகின் மிகப் பெரிய பணக்காரரின் சொத்து மதிப்பு திடீரென சரிந்தது
உலகின் மிகப் பெரிய பணக்காரராகக் கருதப்படும் பெர்னார்ட் அர்னால்ட்டின் சொத்து ஒரே நாளில் 11.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் குறைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கப் பொருளாதாரம் நலிவடைந்ததால் ஆடம்பரப் பொருட்களின் தேவை குறையும் என்ற கருத்து உருவாகியதால், LVMH நிறுவனப் பங்குகளின் மதிப்பு வீழ்ச்சியால் அவரது சொத்து மதிப்பு ஒரே நாளில் 11.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் குறைந்துள்ளது.
LVMH இன் பங்குகளின் மதிப்பு நேற்று (23) 5 சதவிகிதம் சரிந்துள்ளது மற்றும் அந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு ஒரு வருடத்தில் வீழ்ச்சியடைந்த அதிகபட்ச சதவீதமாகும்.
அவரது சொத்து 11.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் குறைந்ததையடுத்து, அவரது புதிய சொத்து மதிப்பு 191.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அர்னால்ட்டின் சொத்து வீழ்ச்சியால், அவருக்கும், பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் எலோன் மஸ்க்கிற்கும் இடையேயான இடைவெளி உலகம், 11.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாகக் குறைந்துள்ளது.