செய்தி

உயிரிழந்த நபர் உயிருடன் இருப்பதாக ஆவணம் கிராம உத்தியோகத்தர் கைது

உயிரிழந்த நபர் உயிருடன் இருப்பதாக ஆவணம் வழங்கிய கிராம உத்தியோகத்தர் ஒருவர் களுத்துறை பிரிவு விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ளவர் தற்போது களுத்துறை தேக்கவத்தை கிராம அதிகாரியின் பகுதியில் கடமையாற்றும் கிராம அதிகாரி என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேக நபர் வஸ்கடுவ, மில்லகஹண்டிய பிரதேசத்தை வசிப்பிடமாகவும், 52 வயதானவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

2021 ஆம் ஆண்டு களுத்துறை பிரதேசத்தில் மற்றுமொரு கிராம உத்தியோகத்தரின் பிரதேசத்தில் கடமையாற்றும் போது உயிரிழந்த பெண் ஒருவரின் பெயரில் முஸ்லிம் தேவாலயமொன்றின் மவ்லவி ஒருவருக்கு அவர் உயிருடன் இருப்பதாக சந்தேகத்திற்குரிய கிராம உத்தியோகத்தர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அவ்வாறு வழங்கப்பட்ட கடிதத்தை எடுத்துச் சென்ற பெண் கடிதத்தை சமர்ப்பித்து, களுத்துறை வெட்டுமகட பிரதேசத்தில் வேறு ஒருவருக்கு சொந்தமான காணியில் ஒரு பகுதிக்கு போலி பத்திரம் தயாரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடிதத்தை வழங்கிய பெண்ணை தனக்குத் தெரியாது என்றும் அவர் இரண்டு சிறு குழந்தைகளுடன் வந்து கடிதம் கேட்டதையடுத்து கடிதத்தை வழங்கியதாகவும் கிராம அதிகாரி கூறியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

(Visited 12 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி