உக்ரைனுக்கு 1.3 பில்லியன் டொலர்களை வழங்கும் அமெரிக்கா!
உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மேலும் 1.3 பில்லியன் டொலர்களை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
லண்டனில் இடம்பெற்ற மாநாடு ஒன்றிலேயே அமெரிக்கா இதனை அறிவித்துள்ளது.
இந்த தவணை உக்ரைனின் எரிசக்தி கட்டம் மற்றும் பிற மீட்பு திட்டங்களுக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
போரின் தொடக்கத்தில் இருந்து உக்ரேனுக்கு அமெரிக்கவின் உதவி இன்றியமையாததாக இருந்தது, அதன் ஆதரவு மற்ற அனைத்து நட்பு நாடுகளையும் விட அதிகமாக உள்ளது.
இதன்படி பிப்ரவரி மாத இறுதி வரை, கீல் இன்ஸ்டிட்யூட் தெரிவித்துள்ளதன் படி அமெரிக்கா , £61 பில்லியனுக்கும் அதிகமாக வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.





