பறக்கும் தட்டுகளை கைப்பற்றிய அமெரிக்கா? கசிந்த இரகசியம்
வேற்றுகிரகவாசிகள் இருப்பதற்கான சான்றுகளைப் பூமியில் உள்ள தொலைநோக்கிகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இன்னும் ஒரு மாதத்தில் அது வெளியிடப்படும் என இந்த நீண்ட நாள் மர்மங்களுக்குப் பதிலளிக்கும் விதமாக நாசாவின் தொடர்புடையாளர் திரைப்பட தயாரிப்பாளர் சைமன் ஹாலண்ட் தெரிவித்துள்ளார்.
இவர் பேசியதற்கு முன்னதாகவே, அதாவது கடந்த ஜூன் மாதம் ஏலியன் இருப்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்ததாகவும், அதில் பூமியில் மனிதர்கள் போலவே ஏலியனும் மறைந்து வாழ வாய்ப்பு இருப்பதாகவும், இதன் காரணமாகத் தான் எலியனைக் கண்காணிக்கப் பூமிக்கு விண்கலம் வந்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.
ஆனால், இது தொடர்பான தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டபோதும் உறுதியான தகவல்கள் இதுவரையில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
இருப்பினும், இந்த மாதிரி சில தகவல்கள் வெளியான காரணத்தால் அடிக்கடி வேற்று கிரக உயிரினங்கள் பூமிக்கு வந்து செல்வதாக உண்மை தெரியாமல் ஒரு தகவல் பரவிக்கொண்டு இருக்கிறது.
இந்த சூழலில், எலியன்களின் பறக்கும் வாகனம்(UFO) பொருட்களைக் கைப்பற்றி அமெரிக்கத் தீவிரமாக ஆராய்ந்து வருவதாக ரகசியத் தகவலை பென்டகனின் முன்னாள் UFO ஆய்வாளர் சீன் மைக்கேல் கிர்க்பாட்ரிக் வெளியீட்டு இருக்கிறார்.
யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் இது குறித்துப் பேசிய அவர் ” அமெரிக்கா இப்போது ஏலியன்களின் பறக்கும் வாகனம்(UFO) உள்பட சில பொருள்களை (UAP) கைப்பற்றி ஏலியன் எடெக்னாலஜியை ஆராய, தீவிரமாக வேலை செய்து வருகிறது.இதற்காக, அமெரிக்க அரசு பெரும் தொகையை ஒதுக்கியுள்ளது.
சமீபத்தில், அமெரிக்காவின் இராணுவத் தலைமையகம் மற்றும் நாசா நிபுணர்கள் மற்றும் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், முன்னர் ‘பறக்கும் தட்டு’ என்று அழைக்கப்பட்டதை இப்போது ‘அளவீடு செய்ய இயலாத விடயங்கள்’ (UAP) என மறுபெயரிட்டுள்ளனர். அமெரிக்க அரசு, பல ஆண்டுகளாக வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு இந்த திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. இது போன்ற பறக்கும் தட்டுகள் எங்கெல்லாம் இருக்கிறது என்பதைக் கண்டறிய ட்ரோன் போன்ற பொருட்களையும் தயார் செய்து அதனைக் கண்காணிக்கவிட்டு இருக்கிறார்கள். எனவும் ரகசியத்தை புட்டு புட்டு வைத்தார். இவர் பேசியதைப் பார்த்த பலரும் ஒரு வேலை ஏலியன் இருப்பது உண்மை தானோ? எனக் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.