மூன்று வருடங்களை கடந்து தொடரும் உக்ரைன், ரஷ்ய போர் : வாழ்க்கையை இழந்த மில்லியன் கணக்கான மக்கள்!

உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையில் இடம்பெற்றுவரும் மூன்றுவருட போர் காரணமாக 51,000 க்கும் மேற்பட்ட வழிகாட்டப்பட்ட குண்டுகளால் உக்ரைன் தாக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
12,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர், அவர்களில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் மற்றும் 30,000 க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
அதே நேரத்தில் ஏழு மில்லியன் பேர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் தரவுகள் முழுமையானது இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் ரஷ்யா சுமார் 839,000 “போர் இழப்புகளை” சந்தித்துள்ளது என்று கியேவ் தெரிவித்துள்ளது.
போரில் உக்ரைனில் ரஷ்யர்கள் மற்றும் உள்ளூர்வாசிகளின் இறப்புகள் சுமார் ஒரு மில்லியனாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
புள்ளிவிவரங்களுக்குப் பின்னால் கொலை, சித்திரவதை, கற்பழிப்பு மற்றும் பொதுமக்கள் உள்கட்டமைப்பு மீதான சட்டவிரோத தாக்குதல்கள் உட்பட 100,000 க்கும் மேற்பட்ட போர்க்குற்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.