இலங்கை வந்துள்ள தாய்லாந்து கப்பல்!
தாய்லாந்தின் ஃபூகெட்டில் இருந்து எம்பியன்ஸ் என்ற சொகுசு ரக கப்பல் இன்று (18.03) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
1,131 பயணிகள் மற்றும் 565 பணியாளர்களுடன் குறித்த கப்பல் நாட்டுக்கு வருகைதந்துள்ள குறித்த கப்பலானது இன்று இரவு மாலைத்தீவிற்கு செல்லவுள்ளது.
அவுஸ்திரேலியா, கனடா, பிரித்தானியா மற்றும் ஜேர்மன் நாட்டு பயணிகள் அந்த கப்பலில் வருகைதந்துள்ளனர்.
குறித்த கப்பலில் வருகைத்தந்த பயணிகள் கொழும்பு, கண்டி மற்றும் காலி ஆகிய நகரங்களுக்கு செல்லவுள்ளனர்.





