செய்தி தமிழ்நாடு

வனவிலங்குகளின் தண்ணீர் தேவைக்காக தொட்டியில் நீர் நிரப்பப்படுகிறது

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் வனப்பகுதிகளில் உள்ள நீர் நிலைகள் கோடை வெப்பத்தால் தண்ணீரின்றி வறண்டுள்ளது.

வன விலங்குகளின் குடிநீர்த் தேவைக்காக டேங்கர்களில் தண்ணீர் கொண்டு சென்று வனப்பகுதிகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளை நிரப்பும் பணிகளை வனத்துறை தொடங்கியுள்ளது.

திருப்போரூரில் 5,350 ஏக்கர் பரப்பளவில் வனப்பகுதிகள் அமைந்துள்ளன.

மலைகளின் இடையே உள்ள வனப்பகுதிகளில் மான்இனங்கள், கழுதைப் புலி,நரி,மயில்,முயல் உட்பட பல்வேறு விதமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

இந்நிலையில்,கோடைக்காலம் துவங்கியுள்ளதால் கிராமப்புற பகுதிகள் மற்றும் வனப்பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் வறண்டு காணப்படுகின்றன.

வனவிலங்குகளின் குடிநீர்த் தேவைக்காக வனப்பகுதிகளில் ஆங்காங்கே கசிவுநீர் குட்டை மற்றும் குடிநீர்த் தொட்டிகளை வனத்துறை அமைத்துள்ளது.

எனினும்,கோடைக்காலம் என்பதால் அவை தண்ணீரின்றி வறண்டு காணப்படுகின்றன.

இதனால், வனவிலங்குகள் குடிநீருக்காக நீர்நிலைகளைத் தேடி ஊருக்குள் புகும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

அதனால்,கிராமப்பகுதி பொதுமக்களின் பாதுகாப்பு கருதியும், வனவிலங்குகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில்,

வனப்பகுதிகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப வேண்டும், என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதனால், திருப்போரூர் வனச் சரகம் சார்பில் வனவிலங்குகளின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக,

வனப்பகுதிகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் நீர் நிரப்பும் பணிகள் தொடங்கப்பட்டது.

NR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!