வெனிசுலாவின் சொத்துக்களை முடக்கிய சுவிட்சர்லாந்து அரசாங்கம்!
வெனிசுலாவின் முன்னாள் ஜனாதிபதி அமெரிக்க படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டதை தொடர்ந்து சுவிட்சர்லாந்தில் உள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆளும் பெடரல் கவுன்சில் இன்று இது தொடர்பில் அறிவித்துள்ளது.
குறித்த சொத்துக்கள் 04 ஆண்டுகள் முடக்கப்பட்டுள்ளதாகவும், சட்டவிரோத சொத்துக்கள் வெளியேறுவதைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சொத்து முடக்கம் தற்போதைய வெனிசுலா அரசாங்கத்தின் உறுப்பினர்களைப் பாதிக்காது எனத் தெரிவித்துள்ளதுடன், வெனிசுலா மக்களுக்கு பயனளிக்கும் வகையில் சில நிதிகளை திருப்பி தரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
வெனிசுலாவின் நிலைமை நிலையற்றது என்றும், வரும் நாட்கள் மற்றும் வாரங்களில் பல்வேறு விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் பெடரல் கவுன்சில் சுட்டிக்காட்டியுள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் சட்டவிரோதமாக கையகப்படுத்தப்பட்ட எந்தவொரு சொத்துக்களையும் சுவிட்சர்லாந்திலிருந்து வெளியே மாற்ற முடியாது என்பதை கூட்டாட்சி கவுன்சில் உறுதி செய்ய விரும்புவதாக தெரிவித்துள்ளது.





