ஐரோப்பா

பிரபல ஜேர்மன் பாடிபில்டர் திடீர் மரணம்; அதிர்ச்சியில் ரசிகர்கள்

பிரபல ஜேர்மன் பாடிபில்டர் 30 வயதில் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜேர்மன் பாடிபில்டர் மற்றும் யூடியூப் நட்சத்திரம் ஜோ லிண்ட்னர் என்கிற Joesthetics தனது 30வது வயதில் திடீரென காலமானார். அவர் தலை நரம்பு வெடித்ததால் இறந்ததாக கூறப்படுகிறது.

இளம் வயதிலேயே, தனது உடல் கட்டமைப்பால் பிரபலமான ஜோ லிண்ட்னர், உலகம் முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு உத்வேகமாக இருந்தார். சமூக ஊடக இன்ஃப்ளுயன்சரான Joesthetics, இன்ஸ்டாகிராமில் 8.5 மில்லியன் பின்தொடர்பவர்களையும், அவரது யூடியூப் சேனலில் 9.5 லட்சம் சப்ஸ்கிரைபர்களுடன் 500 மில்லியன் பார்வைகளையும் பெற்றிருந்தார்.இந்நிலையில் அவரது திடீர் மறைவு அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜோ லிண்ட்னர் ராஷ்மிகா மந்தனா நடித்த கன்னட திரைப்படமான போகருவிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

லிண்ட்னருக்கு அனியூரிசம் என்ற ஆபத்தான நோய் இருந்தது. இந்த நோய் பொதுவாக தலை, கால்கள் மற்றும் வயிற்றில் ஏற்படுகிறது.இந்த நோயின் அறிகுறிகளைக் கூறுவது கடினம். ஏனெனில் அதன் அறிகுறிகள் தெரிவதில்லை. உடலின் ஒரு பகுதியில் இருந்து திடீரென ரத்தக் கசிவு, திடீரென இதயத் துடிப்பு அதிகரிப்பு, நரம்புகளில் கடுமையான வலி, தலைசுற்றல், கண்களுக்கு மேல் அல்லது கீழ் வலி ஆகியவை இந்நோயின் முக்கிய அறிகுறிகளாகும்.

(Visited 39 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்