இலங்கையில் தபால் ஊழியர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது!
இலங்கை தபால் ஊழியர்கள் ஆரம்பித்த 48 மணி நேர அடையாள வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது.
சுற்றுலா விடுதிகள் திறப்பு என்ற போர்வையில் நுவரெலியா தபால் நிலைய கட்டிடம் மற்றும் கண்டி தபால் நிலைய கட்டிடம் விற்பனை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தபால் ஊழியர்கள் கடந்த 8 ஆம் திகதி பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
அதன்படி நேற்று (09.11) நள்ளிரவுடன் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கை நிறைவடைந்துள்ளதுடன், இன்று முதல் வழமை போன்று கடமைகளை மேற்கொள்ளவுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.
பணிப்பகிஷ்கரிப்பின் காரணமாக குவிந்துள்ள சுமார் 10 இலட்சம் தபால் பொருட்களை விநியோகிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்தார்.
(Visited 10 times, 1 visits today)





