சீனாவை தாக்கிய மிக வலுவான சூறாவளி : 04 இலட்சம் மக்கள் வெளியேற்றம்!

1949 க்குப் பிறகு சீனாவை தாக்கிய மிக வலுவான சூறாவளி ஷாங்காய் நகரில் நிலச்சரிவு மற்றும் மழையுடனான காலநிலையை கொண்டுவந்துள்ளது,
இதன்காரணமாக விமானங்கள், படகுகள் மற்றும் ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
ஹாங்சோவில், அதிகாரிகள் 180 க்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்ய திட்டமிட்டுள்ளனர்.
60,000 க்கும் மேற்பட்ட அவசர உதவியாளர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஷாங்காயில் உதவி வழங்க உள்ளனர் என்று மாநில ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் இன்று காலை வரையில் 04 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
(Visited 56 times, 1 visits today)