செய்தி

பாரிய மாற்றங்களுடன் மூன்றாவது போட்டிக்கு களமிறங்கும் இலங்கை அணி

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் பங்கேற்கவுள்ள இலங்கை அணியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த கிரிக்கெட் தெரிவுக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, குசல் மெண்டிஸ், பெத்தும் நிஸ்ஸங்க, கமிந்து மெண்டிஸ் மற்றும் அசிதா பெர்னாண்டோ ஆகியோரை அந்த போட்டியில் இருந்து விடுவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் தென்னாபிரிக்க டெஸ்ட் தொடருக்கு தயாராவதற்கு கால அவகாசம் வழங்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.

அதற்கு பதிலாக நுவனிந்து பெர்னாண்டோ, லஹிரு உதார மற்றும் எஷான் மலிங்க ஆகியோர் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று பல்லேகல கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!