உலகக் கிண்ண தொடரில் விளையாடும் இலங்கை அணி இந்தியா பயணித்தனர்
உலகக்கிண்ண ஒருநாள் கிரிக்கட் போட்டியில் பங்கேற்பதற்காக இந்தியா செல்லும் இலங்கை கிரிக்கெட் அணியினர் சற்று முன்னர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டனர்.
இலங்கை கிரிக்கெட் தலைமையகத்தில் தசுன் ஷனக்க தலைமையிலான கிரிக்கெட் அணியினர் புறப்படுவதற்கு முன்னர் சமய நிகழ்வுகளில் கலந்து கொண்டு ஆசிர்வாதங்களைப் பெற்றுக்கொண்டனர்.
போட்டிகள் அக்டோபர் 5 ஆம் திகதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி நவம்பர் 16 ஆம் திகதி அதே மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியுடன் முடிவடையும்.
ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்காக பத்து அணிகள் மோதுவதுடன், இலங்கை பங்கேற்கும் முதல் போட்டி தென்னாபிரிக்க அணியுடன் எதிர்வரும் 7ஆம் திகதி புதுடெல்லியில் நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டதுடன், காயங்களுக்கு உள்ளாகியுள்ள வனிந்து ஹசரங்க மற்றும் துஷ்மந்த சமிர ஆகியோர் பெயர் அறிவிக்கப்படவில்லை.
வனிந்து ஹசரங்க குணமடைந்தால் போட்டியின் நடுவே அவரை அணியில் சேர்த்துக்கொள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது உலக கிண்ண தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணியில் பின்வரும் வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்,
1. தசுன் ஷனக – தலைவர்
2. குசல் மெண்டிஸ் – துணைத் தலைவர்
3. குசல் ஜனித் பெரேரா
4. திமுத் கருணாரத்ன
5. பெதும் நிஷங்க
6. சரித்த அசலங்க
7. தனஞ்சய டி சில்வா
8. சதீர சமரவிக்ரம
9. துனித் வெல்லாலகே
10. கசுன் ராஜித
11. மதிஷா பத்திரன
12. லஹிரு குமார்
13. தில்ஷான் மதுஷங்க
14. துஷான் ஹேமந்த
15. மகேஷ் தீக்ஷனா
16. சாமிக்க கருணாரத்ன (மேலதிக வீரர்)