யாழில் பிரபல வர்த்தகரின் மகன் மர்மமான முறையில் உயிரிழப்பு
யாழில் பிரபல வர்த்தகரின் மகன் மர்மமான முறையில் உயிரிழப்பு
யாழின் பிரபல வர்த்தகர் ஒருவரின் மகன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
32 வயது மதிக்கதக்க இளைஞனே கொட்டடியில் உள்ள அவரது வீட்டில் இன்று நேற்றுமாலை உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன் ஐஸ் போதைப் பொருளை அதிகளவில் பாவித்த நிலையில் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்ட சடலம் யாழ் போதான வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன்
இன்றைய தினமே சட்டவைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.அதன் பின்னரே உயிரிழப்புக்கான உறுதியான காரணம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
(Visited 29 times, 1 visits today)





