பிரான்ஸில் பெண் கும்பலின் அதிர்ச்சி செயல் – அதிரடி நடவடிக்கை எடுத்த பொலிஸார்

பிரான்ஸில் கொக்கைன் கடத்தலில் ஈடுபட்டிருந்த பெண் உள்ளிட்ட மூவரை மார்செய் நகர பொலிஸார் கைது செய்துள்ளனர்.
செப்டம்பர் 18 ஆம் திகதி இக்கைது சம்பவம் மார்செய் நகரிந் 10 ஆம் வட்டாரத்தில் இடம்பெற்றுள்ளது.
இங்குள்ள வீடொன்றில் சோதனையில் ஈடுபட்ட பொலிஸார் 43 கிலோ கொக்கைன் போதைப்பொருளையும், 50,550 யூரோக்கள் ரொக்கப்பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
19 தொடக்கம் 25 வயதுடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பெண் ஒருவரும் உள்ளதாக அறிய முடிகிறது.
கைதான மூவரில் ஒருவர் போதைப்பொருள் கடத்தலில் காவல்துறையினரால் முன்னதாகவே அறியப்பட்டவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
(Visited 12 times, 1 visits today)