கொழும்பில் 1995 ஆம் ஆண்டிற்கு பின்னர் முதல் முறையாக திறக்கப்பட்ட வீதி
கொழும்பு அலரி மாளிகைக்கு அருகில் கொள்ளுப்பிட்டி பள்ளிவாசலில் இருந்து ரொடுண்டா சுற்றுவட்டம் வரை செல்லும் வீதி பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த வீதி 1995 ஆம் ஆண்டு முதல் நீண்ட காலமாக வாகனப் போக்குவரத்துக்காக மூடப்பட்டிருந்ததுடன், குறித்த வீதி நேற்று திறந்து வைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.
இந்த வீதி திறக்கப்பட்டமையினால் சுற்றுவட்டார பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதோடு, பொதுமக்களுக்கு இலகுவாக பயணிக்க வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.





