சுற்றுலா செல்வதில் பிரித்தானியர்கள் எதிர்கொண்டுள்ள சிக்கல்
புதிய Brexit கடவுச்சீட்டு விதி காரணமாக, இவ்வாண்டு சுமார் 1 இலட்சம் பிரித்தானியார்கள், ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா செல்வதை தவிர்க்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறிய பிறகு, 10 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட பிரித்தானிய கடவுச்சீட்டுகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது எனவும் கூறப்படுகிறது.
உள்விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், 32 மில்லியன் கடவுச்சிட்டுகள் தற்போது 10 ஆண்டுகளுக்கு முன்னர் வழங்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
ஆகையால் பிரித்தானியர்கள் வழக்கமாக செல்லும் ஐரோப்பிய நாடுகளான Iceland, Norway, Lichtenstein மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளுக்கு செல்லும் முன்னர், தங்கள் கடவுச்சீட்டுகளை பரிசோதித்து உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நீங்கள் நாடு திரும்பும் நாளில் இருந்து 3 மாதங்கள் வரையில் உங்கள் கடவுச்சீட்டு செல்லுபடியாகும் என்பதை உறுதி செய்ய வேண்டும்.
உங்கள் கடவுச்சீட்டானது செப்டம்பர் 2018க்கு முன்னர் விநியோகிக்கப்பட்டிருந்தால், அது 10 ஆண்டுகள் மற்றும் 9 மாதங்கள் செல்லுபடியாகும்.
இந்த 10 ஆண்டுகள் விதியானது, கண்டிப்பாக ஐரோப்பாவை விரும்பும் பிரித்தானிய பயணிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தக்கூடும் சில நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
எனவே சுற்றுலாவுக்கு முன்பதிவு செய்யும் முன்னர் தங்களது கடவுடுச்சீட்டுகளை ஒருமுறை பரிசோதித்து உறுதி செய்யுமாறு பெரும்பாலானோர் அறிவுறுத்துகின்றனர்.
மேலும், இதுபோன்ற சிக்கலால் நாலும் நூற்றுக்கணக்கானோர் திருப்பி அனுப்பப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
புதிய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்க பெரியவர்களுக்கு 88.50 பவுண்டுகள் வசூலிக்கப்படுவதுடன், 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 57.50 பவுண்டுகள் வசூலிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.