பேக்கரி பொருட்களின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது

கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டாலும், பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது.
அதன் தலைவர் என்.கே. ஜெயவர்தன 75% க்கும் அதிகமான பேக்கரிகள் நாட்டிலுள்ள இரண்டு நிறுவனங்களிடமிருந்து கோதுமை மாவை வாங்குவதாக கூறினார்.
அந்த நிறுவனங்கள் விலையை உயர்த்தினால் மட்டுமே பேக்கரி பொருட்களின் விலை அதிகரிக்கப்படும் என தலைவர் தெரிவித்தார்.
இலங்கையில் உள்ள இரண்டு நிறுவனங்களினதும் கோதுமை மா ஒரு கிலோ 210 ரூபா மற்றும் 215 ரூபா போன்ற விலைகளில் பேக்கரிகளுக்கு வழங்கப்படுவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.
(Visited 13 times, 1 visits today)