ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் பிறந்தநாளை கொண்டாடிய ஜனாதிபதி
பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் விசேட நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் பிறந்தநாள் கொண்டாட்டம் நடத்தப்பட்டமையே இந்த விசேட நிகழ்வுக்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் பிறந்தநாளை முன்னிட்டு மொட்டுக் கட்சியின் அமைச்சர்களை ஜனாதிபதி தனது அலுவலகத்திற்கு அழைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.





