இலங்கை

ஜனாதிபதி உடனடி கவனம் செலுத்தி எமது பிரச்சினைகளை தீர்க்க முன்வர வேண்டும்: மட்டக்களப்பு கால்நடை பண்ணையாளர்கள் கோரிக்கை

கால்நடைகள் என்பது வெறும் உயிர் அல்ல.அது உணவளிக்கும் ஒரு உயிரினம். அதன் இடங்களை அபகரித்து அதனை வீதிகளில் திரிவதை யாரும் அனுமதிக்கமாட்டார்கள். ஜனாதிபதி அவர்கள் எமது பிரச்சினைக்கு உடனடி கவனம் செலுத்தி எமது பிரச்சினைகளை தீர்க்கமுன்வர வேண்டும் என மட்டக்களப்பு கால்நடை பண்ணையாளர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியமாதவணை, மயிலத்தமடு பண்ணையாளர்கள் தங்களது மேய்ச்சல் தரைகளை தங்களுக்கு மீட்டுத்தர கோரி 16வது நாளாகவும் சுழற்சி முறையிலான கவன ஈர்ப்பு பேராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

மட்டக்களப்பு சித்தாண்டி பாடசாலைக்கு முன்பாக கடந்த வெள்ளிக்கிழமை (15) காலை முதல் போராட்டத்தில் பெரியமாதவணை, மயிலத்தமடு கால்நடை பண்ணையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்த நிலையில் இன்றைய தினம் கால்நடை பண்ணையாளர்களின் குடும்பத்தினரும் இந்த போராட்டத்தில் இணைந்து கொண்டதுடன் மனித சங்கிலி போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்தில் பண்ணையாளர்களின் குடும்பத்தினர் தமது பிள்ளைகளுடன் கலந்துகொண்டு தமது கோரிக்கையினை நிறைவேற்றுமாறு கோரி போராட்டம் நடாத்தினார்கள்.

இன்றைய போராட்டத்தில் பெருமளவான குடும்ப உறுப்பினர்களும் பண்ணையாளர்களும் கலந்துகொண்டதுடன் மனித சங்கிலி வடிவாக போராட்டம் நடைபெற்றதுடன் இதன்போது தமது காணிகளை விடுவிக்குமாறு கோரிக்கை விடும் வகையிலான பல்வேறு கோசங்களும் எழுப்பப்பட்டன.

மயிலத்தமடு,மாதவனை மேய்ச்சல் காணியென்பது எமது சொந்த நிலம்.பரம்பரை பரம்பரையான நாங்கள் எமது கால்நடைகளை பராமரித்துவரும் காணிகளாகும்.அதனை வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் வந்து அபகரிப்பதை நாங்கள் அனுமதிக்கமாட்டோம் என இங்கு கலந்துகொண்ட பண்ணையாளர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

ஜனாதிபதி நியாயமான எமது கோரிக்கையினை நிறைவேற்றவேண்டும்.இந்த போராட்டம் யாரின் காணியையும் கோரி முன்னெடுக்கவில்லை.எமது காணியை எமக்கு வழங்குமாறு கோரியே போராடுகின்றோம் என பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!