இந்தியாவில் ராணுவ மேஜராக ஆள்மாறாட்டம் செய்த மோசடிக்காரரை கைது செய்த பொலிஸார்
ராணுவ மேஜராக ஆள்மாறாட்டம் செய்த மோசடிக்காரர் குஜராத்தில் கைதானார்.அவர் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டதுடன், ராணுவ மேஜர் என்று கூறி இளம் பெண்ணைத் திருமணம் செய்து ஏமாற்றியதாகத் தெரிய வந்துள்ளது.
மோசடி, ஆள்மாறாட்டம், திருட்டு, சதித்திட்டம் தீட்டுதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ள ஷாபாஸ் கான் என்ற அந்த நபர், கைதாகி உள்ளதாக குஜராத் காவல்துறை சனிக்கிழமையன்று தெரிவித்தது.
அவர் உத்தரப் பிரதேச மாநிலத்திலும் பல்வேறு குற்றங்களைப் புரிந்துள்ளார் என்றும் கடந்த ஆகஸ்ட் 20ஆம் திகதி அன்று வந்தே பாரத் ரயில் மூலம் பயணம் மேற்கொண்ட அவரை, டெல்லியில் நடைபெற்ற ஒரு திருட்டு வழக்குக்காக காவல்துறை கைது செய்தது என்றும் டைம்ஸ் ஆஃப் இண்டியா ஊடகம் தெரிவித்துள்ளது.
விசாரணையின்போது பல்வேறு போலி அடையாள அட்டைகளை குஜராத் காவல்துறை அவரிடம் இருந்து கைப்பற்றியதாகவும் இதன் மூலம் அவருக்கு பல்வேறு மாநிலங்களில் நிகழ்ந்துள்ள குற்றச்செயல்களில் தொடர்பு இருப்பதை வெளிப்படுத்த முடிந்தது என்றும் அலிகார் நகர காவல்துறை கண்காணிப்பாளர் சேகர் பதக் தெரிவித்தார்.
அலிகார் நகரைச் சேர்ந்த ஓர் இளம் பெண்ணைப் பற்றிய விவரங்களை, திருமண வரன் தேடும் ஓர் இணையத்தளம் மூலம் தெரிந்துகொண்ட ஷாபாஸ் கான், தம்மை ராணுவ மேஜர் என்று கூறி திருமணம் செய்துள்ளார்.
இது குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது