ஜேர்மனில் குற்றவாளியை கண்டுப்பிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

ஜேர்மன் – ஓல்டன்பேர்க்கில் உள்ள ஜெப ஆலயத்தில் தீ வைத்த குற்றவாளிகள் தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கு வெகுமதிகள் வழங்கவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இதன்படி தாக்குதல் தொடர்பான தகவல்களை வழங்குபவர்களுக்கு 5,000 யூரோக்களை வழங்குவதாக அறிவித்துள்ளனர்.
ஜெப ஆலயத்தின் மீது இனந்தெரியாத நபர் ஒருவர் வெடிகுண்டு வீசியதால் சிறிய சேதம் ஏற்பட்டது.
அந்த நேரத்தில் அங்கு எந்த நிகழ்வும் நடைபெறவில்லை என்பதால் உயிர் சேதம் ஏற்படவில்லை. இருப்பினும் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளி தப்பியோடியுள்ளார்.
இந்த கொடூரமான செயல் நாடு தழுவிய குழப்பத்தை ஏற்படுத்தியது. அக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய தாக்குதல் மற்றும் காஸாவில் நடந்த போருக்குப் பிறகு ஜெர்மனியில் யூத எதிர்ப்பு குற்றங்களில் குறிப்பிடத்தக்க அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 16 times, 1 visits today)