உக்ரைனுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை – ஆயதங்களின்றி தவிப்பு
உக்ரைன் தற்போது ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளுக்கு குறிப்பிடத்தக்க பற்றாக்குறையை எதிர்கொள்கிறது.
உக்ரைனின் வடகிழக்கு பகுதியில் உள்ள அவ்திவ்கா நகரை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியதுதான் இது தொடர்பாக அதிகம் பேசப்பட்டது.
ஆயுதம் இல்லாததால் உக்ரைன் ராணுவம் அப்பகுதியில் இருந்து பின்வாங்க நேரிட்டதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலெனெஸ்கி தெரிவித்தார்.
இதனிடையே, உக்ரைனின் வீழ்ச்சி அமெரிக்காவிலும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்க காங்கிரசுக்கு வழங்கப்பட்ட 95 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு உதவிப் பொதிக்கு செனட் ஒப்புதல் அளித்த போதிலும், பிரதிநிதிகள் சபை அதை நிராகரித்தது.
இந்த உதவிப் பொதி குடியரசுக் கட்சி உறுப்பினர்களால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
அந்த உதவித் தொகையில், 60 பில்லியன் அமெரிக்க டொலர்கள் உக்ரைனுக்கு ராணுவ உதவியாக உள்ளது.