இலங்கையில் ராஜபக்சர்களின் பரிதாப நிலை – படுதோல்வியடைந்த பிரபலங்கள்
இலங்கையில் நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தல்கள் முடிவுகள் தற்போது வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், தேசிய மக்கள் சக்தி முன்னணி வகிக்கிறது.
இந்நிலையில், முன்னாள் அமைச்சரும் சபாநாயகருமான சமல் ராஜபக்சவின் மகன் ஷசீந்திர ராஜபக்ச தோற்கடிக்கப்பட்டுள்ளார்.
இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் ராஜபக்சக்களை பிரதிநிதித்துவப்படுத்தி முக்கிய வேட்பாளராக அவர் இருந்த நிலையில் படுதோல்வியடைந்துள்ளார்.
அவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி மொனராகலை மாவட்டத்தில் போட்டியிட்ட போதிலும், மொனராகலையில் அக்கட்சியால் ஒரு ஆசனத்தை வெல்ல முடியவில்லை.
6 மொனராகலை ஆசனங்களில் 5 தேசிய மக்கள் சக்தியும் மற்றைய ஆசனத்தை ஐக்கிய மக்கள் சக்தியும் கைப்பற்றினர்.
இதேவேளை, ராஜபக்ச குடும்ப உறவினரான நிபுன ரணவக்க படுதோல்வியடைந்துள்ளார்.
2020ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மாத்தறையில் அதிக வாக்குகளைப் பெற்றவராக சாதனை படைத்திருந்தார்.
எனினும் படுதோல்வியடைந்த நிபுண ரணவக்க இம்முறை ஆசனத்தைப் பெறத் தவறியுள்ளார்.