ஜப்பானில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!
ஜப்பானின் மிகப்பெரிய விமான நிறுவனமான ஆல் நிப்பான் ஏர்வேஸின் பயணிகள் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
குறித்த விமானத்தில், விமானியின் அறையில் உள்ள ஜன்னலில் விரிசல் காணப்பட்டதை தொடர்ந்து விமானம் தரையிறக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1182 என்ற விமானம் சப்போரோவில் இருந்து டோயாமாவுக்குப் பறந்து கொண்டிருந்தபோது காக்பிட் ஜன்னலில் விரிசல் கண்டுபிடிக்கப்பட்டது என்று கியோடோ நியூஸ் தெரிவித்துள்ளது.
அந்த விமானம் போயிங் 737 வகையைச் சேர்ந்ததாகும். விமானத்தில் 65 பயணிகளுடன் பணியாளர்களும் பயணித்த நிலையில், அவர்கள் பாதுகாப்பாக உள்ளதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.





