புறப்படும் தருவாயில் தீப்படித்த விமானம் : அச்சத்தில் சிதறி ஓடிய பயணிகள்!
ஓடுபாதையில் பயணித்த விமானம் ஒன்றின் என்ஜின் தீப்பிடித்ததையடுத்து குறித்த விமானத்தில் பயணித்த பயணிகள் அவசர வழியில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இந்தோனேசியாவின் பப்புவா மாகாணத்தின் ஜெயபுராவில் உள்ள சென்டானி விமான நிலையத்தில் இருந்து பயணித்த 737-500 என்ற விமானம் புறப்படுவதற்கு சற்று முன்பு தீப்பிடித்துள்ளது.
இதனை அவதானித்த பயணி ஒருவர் கத்திக் கொண்டே அவசர வெளியேற்றத்தை திறந்துள்ளார். இதனையடுத்து ஏனைய பயணிகளும் அவ்வழியே வெளியேறியுள்ளனர்.
என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே தீப்பிடித்துள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இச் சம்பவம் நிகழ்ந்தபோது 121 பயணிகள் விமானத்தில் உள் இருந்த நிலையில் அவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
(Visited 4 times, 1 visits today)