நடுவானில் விமான இன்ஜினை நிறுத்த முயன்ற விமானி; அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்!
அமெரிக்காவில் நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது, திடீரென விமானி அதன் இன்ஜினை நிறுத்த முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, காக்பிட்டில் இருந்த அலாஸ்கா ஏர்லைன்ஸ் ஒருவர் திடீரென விமானத்தின் இன்ஜின்களை நிறுத்த முயன்ற சம்பவம் நடந்துள்ளது. அந்த விமானி அப்போது பணியில் இல்லை. அவர் ரெஸ்ட் எடுத்துக் கொண்டு இருந்துள்ளார். பணியில் இருந்த விமானியின் கண்களில் மண் தூவிவிட்டு எஞ்சினை நிறுத்தவதற்கு இவர் முயன்றுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹாரிஸ்ன் ஏர் எம்பரர் இ 175 என்ற விமானத்தில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இந்த விமானம் வாஷிங்டனில் இருந்து சான் பிரான்சிஸ்கோ செல்லும் போது தான் இந்த ஆப் டியூட்டி விமானி திடீரென விமானத்தின் எஞ்சினை நிறுத்த முயன்றுள்ளார். விமானத்தில் மொத்தம் 80 பயணிகள் இருந்த நிலையில், இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இதையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக விமானம் உடனடியாக அருகே இருந்த ஓரிகான் ஏர்போர்ட்டிற்கு திருப்பி விடப்பட்டது.
இது தொடர்பாக அலாஸ்கா ஏர்லைன்ஸ் விரிவான அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில் “அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானியால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. காக் பிட் அருகே இருந்த நபர் எஞ்சினை நிறுத்த முயன்றார். இருப்பினும், விமானத்தின் கேப்டனும் முதல் அதிகாரியும் துரிதமாகச் செயல்பட்டனர். இதனால் விமானம் ஆஃப் ஆகாமல் தடுக்கப்பட்டது. விமானம் பாதுகாப்பாக இருந்தது. இருப்பினும், முன்னெச்சரிக்கையாக விமானம் தரையிறக்கப்பட்டது” என்று கூறப்பட்டுள்ளது.
அந்த விமானியைப் பெயரை அலாஸ்கா நிறுவனம் வெளியிடவில்லை. இருப்பினும் , இது தொடர்பாக பொலிஸாரும் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், அதில் இந்த ஆபத்தான செயலை செய்தவர் யார் என்பது குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளது. 44 வயதான விமானி ஜோசப் எமர்சன் என்பவர் இந்த பயங்கர சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் மீது விமானத்தில் இருந்த 83 பேரைக் கொலை செய்ய முயன்றதாக 83 கொலை முயற்சி வழக்குகள் உள்ளிட்டவை பதிவு செய்யப்பட்டுள்ளது.
விமானி துரிதமாகச் செயல்பட்டதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நடந்த போது விமானத்தில் இருந்த பணிப்பெண் அங்கே என்ன நடந்தது என்பதை விளக்கியுள்ளார். அதாவது அந்த நபர் மன அழுத்தம் காரணமாக இப்படிச் செய்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், விமானம் பாதுகாப்பாக இருந்தாலும் இந்த சம்பவம் காரணமாக விமானத்தைத் தரையிறக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்ட நிலையில், விமானி ஜோசப் எமர்சன் உடனடியாக கைது செய்யப்பட்டார். அவரிடம் இந்தச் சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். நடுவானில் விமானி திடீரென எஞ்சினை நிறுத்த முயன்ற சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.