இந்தியா செய்தி

திரைப்படம் பார்க்கச் சென்றவர் பரிதாபமாக உயிரிழப்பு

திரைப்படம் பார்க்கச் சென்ற 35 வயதுடைய நபர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மஹேவகஞ்சில் கடை நடத்தி வந்த அக்ஷத் திவாரி உயிரிழந்தார்.

‘கதர்-2’ திரைப்படத்தை பார்க்க திரையரங்குக்கு வரும் போது அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

அதன்படி, இந்த சம்பவம் முழுவதும் திரையரங்கில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிட்டி சென்டரில் உள்ள திரையரங்கிற்கு இரவு நேர திரையிடலைப் பார்ப்பதற்காக வந்திருந்த அவர், யாரிடமோ அலைபேசியில் பேசிக்கொண்டு படிக்கட்டுகளில் ஏறிச் சென்று கொண்டிருந்தார்.

சிசிடிவி காட்சிகளில் அவருக்கு முன்னால் இரண்டு இளைஞர்கள் நடந்து செல்வதையும் காணமுடிகிறது.

அப்படி நடந்து சென்ற திவாரி, திடீரென தரையில் விழுந்ததால், சாட்சிகள் அவரிடம் வந்து உடனடியாக சோதனை செய்தனர்.

ஆனால் அவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை என்று கூறப்படுகிறது.

பின்னர், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அதன்படி, மாரடைப்பே மரணத்திற்கு முதன்மைக் காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

(Visited 4 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி