கொள்ளையிட்ட நகையை விழுங்கிய நபர்

கம்பஹா, ஒருத்தோட்டையில் வீதியில் பயணித்த பெண்ணிடம் தங்க நகையை திருடிய நபரிடம் விசாரணை நடத்தும் போதே அதனை விழுங்கியதாக யக்கல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பெண்களின் தங்க நகையை அருத்துச் சென்றுள்ளதாகவும், சுற்றி வளைத்தவர்கள் வந்ததையடுத்து சாரதி தப்பியோடிய நிலையில், நகையை வைத்திருந்த கொள்ளையன் அதனை விழுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யக்கல பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் அதுல கமகேவின் பணிப்புரையின் பேரில் பொலிஸ் பரிசோதகர் சரத் பண்டார உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் அந்த நகையை வெளியில் எடுத்து சந்தேக நபரை கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
(Visited 15 times, 1 visits today)