தென் கொரிய குடியரசின் நிரந்தர இருப்பு சாத்தியமற்றது : எச்சரிக்கும் வடகொரியா!
அணு ஆயுதங்களைப் பயன்படுத்த முயன்றால் கிம்மின் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று தென் கொரிய தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் வடகொரியா பதிலடி கொடுத்துள்ளது.
தென்கொரியாவை அணுவாயுதங்களை பயன்படுத்தி அழித்துவிடுவோம் என்று வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன் தெரிவித்துள்ளார்.
இருநாடுகளுக்கு இடையிலான பதற்றங்களுக்கு மத்தியில் இவ்வாறான சொல்லாடல்கள் பயன்படுத்துவது புதிதல்ல. இருப்பினும் மீபத்திய கருத்துக்கள் வடக்கின் சமீபத்திய அணுசக்தி நிலையத்தை வெளிப்படுத்தியமை மற்றும் அதன் தொடர்ச்சி ஏவுகணை சோதனைகள் மீதான கடுமையான தாகங்களை தொடர்ந்து வந்துள்ளன.
சிறப்பு அதிரடிப் படைப் பிரிவுக்கு விஜயம் செய்த கிம், வட கொரியாவின் இறையாண்மையை ஆக்கிரமிக்கும் ஆயுதப் படைகளைப் பயன்படுத்த தென் கொரியா முயற்சித்தால், அணு ஆயுதங்கள் உட்பட தன்னிடம் உள்ள அனைத்து தாக்குதல் சக்திகளையும் தனது இராணுவம் தயக்கமின்றி பயன்படுத்தும் எனக் கூறியுள்ளார்.
அத்தகைய சூழ்நிலை வந்தால், சியோல் மற்றும் கொரியா குடியரசின் நிரந்தர இருப்பு சாத்தியமற்றது” என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.