இலங்கை

தலைமன்னார் சிறுமி படுகொலை தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

தலைமன்னார், ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரை எதிர்வரும் 48 மணி நேரம் பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த மன்னார் நீதிமன்றம் இன்று (17) அனுமதி வழங்கியுள்ளது.

தலைமன்னார் – ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி ஒருவர் நேற்றைய தினம் (16) சடலமாக மீட்கப்பட்ட நிலையில் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அதே கிராமத்தில் உள்ள தென்னை தோட்டத்தில் வேலை செய்யும் திருகோணமலை குச்சவெளி பகுதியை சேர்ந்த 52 வயதுடைய சந்தேக நபரை பொலிஸார் இன்றைய தினம் (17)​ மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர் .

இதன் போது மன்னார் மாவட்ட பதில் நீதவான் எஸ்.ஜெபநேசன் லோகு, பொலிஸாரின் விண்ணப்பத்திற்கு அமைய குறித்த சந்தேக நபரை எதிர்வரும் 48 மணித்தியாலம் பொலிஸ் தடுப்பில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்ள பொலிஸாருக்கு அனுமதி வழங்கினார்.

Body of missing girl found half naked in Talaimannar - Breaking News |  Daily Mirror

இந்த நிலையில் குறித்த சந்தேக நபர் மேலதிக விசாரணைக்காக பொலிஸ் காவலில் அழைத்துச் செல்லப்பட்டார்.இதேவேளை இன்றைய தினம் (17) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்ட சிறுமியின் சடலம் காலை 10.30 மணியளவில் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

பிரேத பரிசோதனை மேற்கொண்ட சட்ட வைத்திய அதிகாரி செல்லத்துரை பிரணவன், குறித்த சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்த நிலையில் சடலம் பெற்றோரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

(Visited 29 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!