இலங்கையில் தேர்தல் தொடர்பில் பெஃப்ரல் அமைப்பு வெளியிட்டுள்ள கருத்து!
தேர்தல் முறை திருத்த யோசனைகள் உரிய முறையில் அமுல்படுத்தப்படாவிட்டால், தேர்தல் தாமதமாகும் அபாயம் உள்ளதாக பெஃப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள பெஃப்ரல் அமைப்பின் தலைவர் ரோகண ஹெட்டியாராச்சி, “தற்போது தேர்தல் முறை திருத்தம் தொடர்பில் அமைச்சரவையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த பிரேரணை பாராளுமன்ற தேர்தல் முறைமை கலப்பு விகிதாசார முறைக்கு கொண்டு செல்வது குறித்த பிரேரணையாகும். பாராளுமன்ற தேர்தல் முறை திருத்தப்பட்டால் அதனை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பில் இணக்கம் காணப்பட வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் எல்லை நிர்ணய பணிகள் நடைபெற வேண்டும். எல்லை நிர்ணயம் ஏதேனும் ஒருவகையில் முடிவுக்கு வரவில்லை என்றால், வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் தேர்தல் முறை திருத்தம் செய்யப்பட்டாலும், இந்த வரைவில் திருத்தம் கொண்டு வருவது கட்டாயமாகும்.
அது தற்போதுள்ள தேர்தல் முறையில் தேர்தலை நடத்துவதற்கான அதிகாரத்தை தேர்தல் ஆணையத்திற்கு வழங்கும் எனத் தெரிவித்துள்ளார்.