தென் அமெரிக்கா

சவப்பெட்டியில் வைத்து 4 மணிநேரத்திற்கு பின் உயிருடன் எழுந்த மூதாட்டி!

இறந்ததாக அறிவிக்கப்பட்ட 76 வயது மூதாட்டி, சவப்பெட்டியில் நான்கு மணிநேரம் உயிருடன் இருந்தது ஈக்குவடாரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஈக்குவடார் நாட்டின் லாஸ் ரியோஸ் மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் பெல்லா மொண்டோயா எனும் 76 வயது மூதாட்டி அனுமதிக்கப்பட்டார்.இதயம் தொடர்பான பிரச்சனைகள் அவருக்கு இருந்த நிலையில், உடல்நலக்கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்ட அவரை மருத்துவர்கள் பரிசோதித்தனர்.

அதன் பின்னர் சிகிச்சையில் இருந்த பெல்லா 12 மணியளவில் பக்கவாதம் ஏற்பட்டு இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.இதனையடுத்து அவரது உடல் சவப்பெட்டியில் வைக்கப்பட்டது. அதன் பின்னர் ஒரு இறுதிச்சடங்கில் ஆடைகளை மாற்ற சவப்பெட்டி திறக்கப்பட்டது.

சவப்பெட்டியில் 4 மணிநேரத்திற்கு பின் உயிருடன் எழுந்த மூதாட்டி! திகைத்துப்போன குடும்பத்தினர் | Woman Come Back Life From Coffin Shocking Ecuador

அப்போது பெல்லாவின் கை அசைவதையும், கண்களைத் திறப்பதையும் பார்த்து பலரும் அதிர்ச்சியடைந்தனர். சுமார் 4 மணிநேரம் அவர் சவப்பெட்டியில் இருந்தததாக கூறப்படுகிறது.பின்னர் அவசர உதவி எண்ணான 911க்கு அழைப்பு விடுக்கப்பட்டது. சில நிமிடங்களில் துணை மருத்துவர்கள் வந்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவர் தீவிர சிகிச்சையில் வைக்கப்பட்டார். மூதாட்டி பெல்லா மொண்டோயாவின் மகன் கில்பர்ட் பால்பெரன், இச்சம்பவம் தொடர்பில் மருத்துவமனையின் அலட்சியத்தை குற்றம்சாட்டும் வகையில் உள்ளூர் வழக்குரைஞர் அலுவலகத்தில் அறிக்கையை தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

(Visited 8 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

தமிழ்நாடு தென் அமெரிக்கா

3D அனிமேஷன் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் சார்ந்த துறைகளில் கடல் போல வாய்ப்புகள்

மாயா அகாடமி ஆஃப் அட்வான்ஸ்டு சினிமாட்டிக்ஸ் எனும் மாக்  (MAAC) கோவையில்  நவீன 3D அனிமேஷன் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் குறித்து இளம் தலைமுறை மாணவ,மாணவிகளுக்குபயிற்சி அளித்து
தென் அமெரிக்கா

அவள் என் காதலி.. 800 வருடங்கள் பழமையான மம்மியோடு பொலிஸில் சிக்கிய 26 வயது இளைஞன்!

பெரு நாட்டில் 800 வருடப் பழமையான மம்மியை உணவு வழங்கப்பயன்படும் பையில் வைத்து, எடுத்துச் செல்லும் போது காவல்துறையிடம் நபர் ஒருவர் சிக்கியுள்ளார். பெரு நாட்டை சேர்ந்த