உலகம் செய்தி

காசாவில் உயிரிழந்துள்ள பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

காசாவில் இஸ்ரேலிய படையினர் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதுவரை 104 இற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக  ஹமாஸ் நடத்தும் சிவில் பாதுகாப்பு நிறுவனம் மற்றும் மருத்துவமனைகள் தெரிவித்துள்ளன.

அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் முன்னெடுக்கப்பட்ட போர் நிறுத்தத்தை ஹமாஸ் மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.

இந்நிலையில் நேற்றைய தினம் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அவசர கூட்டத்தை கூட்டி தாக்குதல்களை முன்னெடுக்க இராணுவத்தினருக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்த தாக்குதலில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் இஸ்ரேலின் குற்றச்சாட்டை  ஹமாஸ் மறுத்துள்ளது. தாக்குதலுக்கும் தனக்கும் “எந்த தொடர்பும் இல்லை” என்றும், ஒப்பந்தத்தில் உறுதியாக இருப்பதாகவும் கூறியுள்ளது.

(Visited 4 times, 1 visits today)

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி