ஹாங்காங்கில் அமுலுக்கு வந்த புதிய பாதுகாப்பு சட்டம் : முதல் குற்றவாளிக்கு 14 ஆண்டுகள் சிறை!
ஹாங்காங் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் முதல் கைது செய்யப்பட்டுள்ள முதல் குற்றவாளிக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
27 வயதான Chu Kai-pong, என்ற நபர் revolution of our times என்ற சட்டையை அணிந்திருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டிருந்தார்.
இது கடந்த 2019 இல் அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களின் போது முழக்கமிட்ட கூற்றாகும். இந்நிலையில் இந்த முழக்கமானது சீனாவில் இருந்து ஹாங்காங்கைப் பிரிப்பதைக் குறிக்கும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த குற்றத்தின் கீழ் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன் அவருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் புதிய பாதுகாப்பு சட்டம் கடந்த மார்ச் மாதம் அமுலுக்கு வந்தது. இது கருத்துச் சுதந்திரத்தை மேலும் முடக்குகிறது என்று விமர்சகர்கள் கூறிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.