ஜெர்மனி அரசாங்கத்தின் புதிய நடைமுறை!
ஜெர்மன் அரசு, மக்கள் தங்கள் பெயரையும் பாலினத்தையும் சட்டபூர்வமாக மாற்றுவதை எளிதாக்க திட்டமிட்டுள்ளது.
அதற்கு ஏற்ற வகையில் ஒரு சட்ட முன்மொழிவைச் முன் வைத்துள்ளது.
பெயர் மற்றும் பாலினத்தை மாற்ற விரும்புவர்களுக்கு, அதை மாற்றுவது என்பது ஒரு பெரிய நடைமுறை சிக்கலாக உள்ளது. இந்நிலையில், ஜெர்மன் அரசு, மக்கள் தங்கள் பெயரையும் பாலினத்தையும் சட்டபூர்வமாக மாற்றுவதை எளிதாக்கும் வகையில் ஒரு சட்ட முன்மொழிவைச் முன்வைத்துள்ளது.
ஜெர்மனை பொறுத்தவரையில் ஒரு நபர் பெயரை மாற்ற வேண்டும் என்றால், அவர் நிபுணரிடம் செல்ல வேண்டும். அவர் மதிப்பிட்ட பின், நீதிமன்றம் அதை அங்கீகரிக்க வேண்டும். அதன் பின்பே அவரது பெயர் மாற்றப்படும். பல தசாப்தங்களாகவே ஜெர்மனியில் இந்த முறைதான் பின்பற்றப்பட்டு வருகிறது.
திருநங்கைகள் தங்களது பெயர் மற்றும் பாலினத்தை மாற்றும் நடவடிக்கையை மிகவும் எளிதாக்கும் வகையில், இந்தத் திட்டத்தை ஜெர்மன் அரசாங்கம் முன்வைத்தது. இந்த சுயநிர்ணய திட்டத்தின்படி (self-determination law), தங்களது முதல் பெயரையும், சட்டபூர்வ பாலினத்தையும் பதிவாளர் அலுவலகங்களில் (Register office) மாற்றிக் கொள்ளலாம். வேறெந்த நடைமுறைகளும் தேவை இல்லை.
“சுயநிர்ணயச் சட்டத்தின் மூலம் நாங்கள் மற்றொரு பெரிய அடியை முன்னெடுத்துள்ளோம். மேலும் பாகுபாடுகளுக்கு எதிரான பாதுகாப்பிலும், திருநர் மற்றும் திருநங்கைகள், மூன்றாம் பாலினத்தவர்களின் உரிமைகள் ஆகியவற்றிலும் நாங்கள் முன்னேறியுள்ளோம். இதன்மூலம் பல தசாப்தங்களாக அவற்றை இழந்தவர்களுக்கு கண்ணியத்தை மீண்டும் கொடுக்க முடியும்’’ என்று ஜெர்மனியின் குடும்பங்களுக்கான அமைச்சர் லிசா பாஸ் கூறியுள்ளார்.