கட்டுநாயக்க விமான நிலைய கழிப்பறைக்குள் சிக்கிய மர்மம் – காட்டிக்கொடுத்த நபர்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெருந்தொகை போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமான நிலையத்தின் ஆண்கள் கழிப்பறைக்குள் இருந்து போதைப்பொருள் நேற்றையதினம் மீட்கப்பட்டுள்ளது.
சுமார் 18.5 மில்லியன் ரூபா பெறுமதியான குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கழிப்பறைக்குள் சந்தேகத்திற்கிடமான முறையில் பல பொதிகள் இருந்தமையை துப்புரவு பணியாளர் ஒருவர் கண்டுள்ளார்.
இது குறித்து விமான நிலைய சுங்க போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
இதன்போது பொதிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 422 கிராம் குஷ் மற்றும் 1.262 கிலோகிராம் ஹஷிஷ் போதைப்பொருட்களை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இது தொடர்பில் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் பொலிஸ் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.