ரஷ்யாவிலிருந்து வெளியேறும் மிகவும் பிரபலமான நிறுவனம்

ரஷ்யாவிலிருந்து முழுமையாக வெளியேற ஜப்பானின் Uniqlo நிறுவனம் முடிவெடுத்துள்ளது.
உக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்ததால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் Uniqlo ரஷ்யாவில் தனது செயல்பாடுகளை நிறுத்தி வைத்துள்ளது.
சந்தையிலிருந்து நிரந்தரமாக வெளியேற அது முடிவெடுத்திருப்பதாக ரஷ்யாவின் தொழில், வர்த்தகத் துணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆனால் Uniqlo நிறுவனம் இன்னும் அதற்கான விண்ணப்பத்தை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கவில்லை. ரஷ்யாவில் அதை வாங்க இன்னும் யாரும் முன்வரவில்லை என்பதை அது குறிப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
அது குறித்து Uniqlo உடனடியாக எந்தக் கருத்தும் சொல்லவில்லை. ரஷ்யாவில் Uniqlo சுமார் 50 கடைகளை நிர்வகித்தது.
உக்ரேனில் ரஷ்யாவின் நடவடிக்கைகளைக் கண்டித்து ஏற்கனவே பல நிறுவனங்கள் அந்நாட்டிலிருந்து வெளியேறிவிட்டன.
(Visited 14 times, 1 visits today)