“ஊடகங்கள் அடக்கப்படுகின்றன” – சஜித் குற்றச்சாட்டு!
சுதந்திரமான ஊடகங்களை அடக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகக் குற்றம் சாட்டிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அத்தகைய நடவடிக்கையைத் தடுக்க தனது கட்சியால் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகங்களுக்கு இன்று கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“இலங்கையை ஒரு பொலிஸ் அரசாக மாற்றவும், சர்வாதிகாரத்தை உருவாக்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது போல் தெரிகிறது.
அத்தகைய நடவடிக்கையைத் தடுக்க நாங்கள் அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் எடுப்போம்,” என்று அவர் கூறினார்.
ஒரு நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் நான்காவது தூண் ஊடகங்கள் என்றும், அவை நிர்வாகக் கிளை, சட்டமன்றம் மற்றும் நீதித்துறையுடன் இணைந்து செயல்படுவதாகவும் அவர் கூறினார்.





